நயன்தாராவின் அடுத்த பட “தலைப்பு” இதுவா.? ரொம்ப மொக்கையா இருக்கே.. புலம்பும் ரசிகர்கள்.!

நடிகை நயன்தாரா தமிழில் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே ஆள் பார்ப்பதற்கு அழகாகவும் திறமையை வெளிப்படுத்த கூடியவராகவும் இருந்ததால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தன.

அந்த வகையில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்திக்கொண்டு லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார் நயன்தாரா. மேலும் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

இப்படி தொடர்ந்து படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா ஒரு கட்டத்தில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து இருவருக்கும் கடந்த மாதம் தான் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு விக்கி மற்றும் நயன்தாரா சில நாட்கள் ஊர் சுற்றி வந்த நிலையில் மீண்டும் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிஸியாக இருந்து வருகிறார்.

தற்போது நயன்தாரா கையில் ஜவான், கோல்டு, கனெக்ட் போன்ற சில படங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் நயன்தாராவிற்கு கல்யாணம் ஆன காரணத்தை அடுத்து பல நடிகைகளும் இனி நயன்தாராவின் மார்க்கெட் சரிந்து விடும் அதிக வாய்ப்புகள் கிடைக்காது என நினைத்து வந்த பட்சத்தில் தற்போது அவரது அடுத்த படம் ஒன்றிலும் கமிட் ஆகியுள்ளார்.

ஆம் அந்த படம் நயன்தாராவிற்கு 75வது படமாகும். இந்த படத்தை ட்ரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இரண்டும் சேர்ந்து தயாரிக்க உள்ளது.. மேலும் இந்த படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படம் ஒரு பெண் சமையல் கலைஞரை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாம். அதனால் இந்த படத்திற்கு “அன்னபூரணி” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment