வாரிசு படத்தின் கதை இதுவா.? இணையதளத்தில் லீக்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார் இவர் இதுவரை நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக விஜய் நடித்து வருகிறார் இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் தில்ராஜு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் காமெடி என அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகும் என படத்தின் தயாரிப்பாளரும் இந்த படத்தில் நடித்தவரும் சரத்குமாரும் ஏற்கனவே சொல்லிவிட்டனர்.

இதுபோன்று பல்வேறு படங்களில் விஜய் நடித்து வெற்றி கண்டுள்ளார்.  அந்த வரிசையில் இந்த படமும்  ஒரு வெற்றி படமாக இருக்கும் என தெரிய வருகிறது இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்துக்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இதுவரை இரண்டு கட்டடப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஹார்பர் பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படத்தின் கதை இதுதான் என கூறி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் இந்த படத்தில் விஜய் ராஜேந்திரன் என்ற ஒரு மிகவும் மகிழ்ச்சியான அதிர்ஷ்டசாலியானவராக வாழ்ந்து வருகிறார் அவரின் வளர்ப்பு தந்தை இறந்து போகும்பொழுது நிலைமை மாறுகிறது. அதிலிருந்து தனது குடும்பத்தையும் மற்றவர்களையும் காப்பாற்றி சரி செய்வது போல படம் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Leave a Comment