டாப் நடிகர் படங்களில் நடித்து வந்த ஓவியா செல்லத்துக்கு இந்த நிலைமையா.? இப்ப யாரு கூட ஜோடி போட்டு நடிக்கப் போகிறார் தெரியுமா.? அவரே வெளியிட்ட பதிவு.

சினிமா உலகில் தொடர்ந்து நான்கைந்து திரைப்படங்களில் நடித்து விட்டால் இப்போது இருக்கின்ற நடிகைகள் தனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இது என நினைத்துக்கொண்டு துள்ளல் ஆட்டம் போடுவார்கள் ஆனால் அடுத்தடுத்து இரண்டு படங்களில் அவர் வெற்றி பெறவில்லை என்றால் சினிமா அவரை கண்டுகொள்ளாது என்பதை உணர மாட்டார்கள்.

அந்த லிஸ்ட்டில் தான் தற்பொழுது ஓவியாவும் உள்ளார். ஆரம்பத்தில் கிராமத்து கதைகள் உள்ள படங்களில் பின்னி பெடலெடுத்து மக்களின் மனதில் இடம் பிடித்து இருந்தாலும் அதன் பிறகு போகப்போக கவர்ச்சியான படங்களில் நடிப்பது மற்றும் சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

இருந்தாலும் மீடியா உலகம் இவருக்கு அவ்வபொழுது வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மக்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்து இருந்தாலும் வெளிவந்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படி பெரிய வரவேற்பைப் பெறாததால் இவரை மீண்டும் சினிமா கீழே இறக்கி விட்டது.

தற்பொழுது படவாய்ப்பு இல்லாமல் கம்முனு கிடப்பதால் மீடியா உலகமும் இவரை எட்டிப் பார்க்கவில்லை. இருப்பினும் வர இருக்கின்ற ஓரிரு படங்களிலாவது நடித்து தனது மார்க்கெட்டை நிலை நிறுத்த முயற்சிக்கிறார். மார்க்கெட் இல்லாததால் முன்னணி நடிகர்களின் படங்கள் கிடைக்கவில்லை அந்த காரணத்தினால் தற்போது புதுமுக நடிகர்களுடன் ஜோடி போடவும் ரெடியாகிவிட்டார்.

அதுதான் என்று பார்த்தால் தற்போது காமெடி நடிகர் யோகிபாபு உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அந்த தகவலை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் அந்த போட்டோவை பதிவிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.

oviya9
oviya9
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment