இனி நடிக்கப் போகும் திரைப்படத்திற்கு விஜய்சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா.! தலை சுற்றி நிற்கும் தயாரிப்பாளர்கள்

vijay sethupathi 33
vijay sethupathi 33

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அந்தவகையில் இவர் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார். அந்தவகையில் கடைசியாக இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து  ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் உப்பண்ணா திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரின் சிறந்த நடிப்பினால் இத்திரைப்படம் மூன்றே நாட்களில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது இவர் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ்சாவதற்கு தயாராக உள்ளது.

ஆனால் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் தியேட்டரில் ரிலீஸ்சாகுமா இல்லை ஓடிடி வழியாக ரிலீஸ்சாகுமா என்று முடிவு எடுக்காமல் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

எனவே இவரின் மவுசு அதிகரித்ததும் இவரின் சம்பளத்தையும் விஜய்சேதுபதி ஏத்தியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது விஜய் சேதுபதி சினிமாவில் பிரபலம் அடைந்த பிறகு தற்போது வரையிலும் 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

தொடர்ந்து அடுத்த அடுத்ததாக 7,8 திரைப்படங்களிலும் 10கோடி சம்பளத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு இருபது கோடி சம்பளத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளாராம்.