விஜய் டிவியில் வேலை செய்தபோது சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் இவ்வளவா.? பல வருடங்கள் கழித்து வெளிவரும் செய்தி.

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் சினிமா உலகில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாக மீடியா உலகில் பயணித்ததால் சினிமா எப்படிப்பட்டது என்பதை ஓரளவு தெரிந்து வைத்து  இருந்தார்.

அதனால் இவர் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் கவரும் படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் வெகுவிரைவிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்ததோடு மட்டுமில்லாமல் இவரது திரைப்படங்கள் நல்ல வசூலையும் பார்த்தது.

இதனால் ஒரு கட்டத்தில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவரை நம்பி நிறைய படங்களை கொடுக்க ஆரம்பித்தனர் அதை சரியாக எடுத்துச் சென்றதால் வெற்றிமேல் வெற்றியைக் குவித்த சிவகார்த்திகேயன்.

ஒரு கட்டத்தில் அதிக சம்பளத்தை உயர்த்தினாலும் வரவேற்பு மட்டும் குறையாமல் இருக்கிறது தற்போது கூட சிவகார்த்திகேயன் டாக்டர், டான், அயலான் போன்ற பல்வேறு படங்கள் அடுத்தடுத்து வெளிவர வரிசை கட்டி நிற்கின்றன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பற்றிய ஒரு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது அதாவது விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அவர் சம்பளமாக 2000 ரூபாய் தான் வாங்கினார் என்ற தகவலை கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த இர்பான் முகமது தெரிவித்துள்ளார்.

Leave a Comment