ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டியதுமட்டுமல்லாமல் இவருக்காக அவருடைய ரசிகர்கள் ஒரு கோயிலையும் கட்டி அவருக்கு கும்பாபிஷேகம் நடத்தி உள்ளார்கள்.
இவ்வாறு முதன்முதலாக நடிகைக்கு கோவில் கட்டிய சம்பவம் என்றால் அது நடிகை குஷ்புவுக்கு தான். அந்த வகையில் நமது நடிகை பிரபல இயக்குனர் சுந்தர் சியின் மனைவி என்பது குறிப்பிடதக்கது.
நடிகை குஷ்பு பொதுவாக திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் தன்னுடைய நடிப்பு திறனை வழிகாட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சீரியல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது.
இவ்வாறு திரை உலகில் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் பிரபல கட்சியிலிருந்து மக்களையும் கவரும் வண்ணத்தில் கருணாநிதி மீது இருந்த மரியாதையின் காரணமாக திமுக கட்சியில் இணைந்துகொண்டார்.
பின்னர் என்ன ஆயிற்று என்று தெரியாமல் திடீரென திமுகவை விட்டு வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார் நடிகை குஷ்பு. இவ்வாறு குஷ்பு திமுகவில் இருந்து வெளியேறுவதற்கு காரணம் திமுகவின் அடுத்த தலைவர் யார் என பேசியது தான் காரணம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் பிரபல காங்கிரஸ் கட்சியில் இருந்த நமது நடிகை பின்னர் பாஜகவில் இணைந்து கொண்டார். அந்த வகையில் ஆயிரம் விளக்கு என்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியையும் கண்டுள்ளார்.
இவ்வாறு அந்த கட்சியில் இருந்தும் வெகு காலமாக எந்த ஒரு பேச்சும்மின்றி அமைதி காத்து வருகிறார் அந்த வகையில் தனக்கு வழங்கப்பட்ட செய்தி தொடர்பாளர் பதவி கூட தனக்கு வேண்டாம் என கூறிவிட்டாராம். இதன் காரணமாக குஷ்பு மறுபடியும் வேறு கட்சியில் இணையபோகிறார் என பலரும் பேசி வருகிறார்கள்.


