Meera Antony : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வருபவர் விஜய் ஆண்டனி இவருடைய மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணி அளவில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மீள முடியாத துக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் டி சிவா பேட்டி ஒன்றில் விஜய் ஆண்டனி மகள் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. மீராவின் மரணம் கேள்விப்பட்டு காலை 8:00 மணி அளவிலிருந்து விஜய் ஆண்டனுடன் இருந்து வருகிறேன் அவர் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேச மாட்டார்.
பெரிதாக அவர் கோபப்பட்டு கூட யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை தன்னுடைய குடும்பத்திற்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நபர் சென்னை பகுதியில் ஷூட்டிங் நடந்தால் ஸ்கூல் பிள்ளை போல் சரியாக ஷூட்டிங் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விடுவார் திரை உலகில் இருந்தாலும் அனாவசியமாக பார்ட்டி போன்றவற்றில் கலந்து கொள்ள மாட்டார்.
தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் மீது அலாதி பாசம் கொண்டவர். அருமையான தாய், தந்தைகளை கொண்ட மீரா ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை ஆனால் அவருடைய வீட்டில் எந்த பிரச்சனையும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை அதேபோல் பள்ளியிலும் எந்த ஒரு தொந்தரவும் அவருக்கு இருப்பதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.

படிப்பிலும் படும் புத்திசாலி பெண்ணாகத் தான் இருந்தார் குறிப்பாக விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பில் விபத்தில் சீக்கிய மருத்துவமனையில் இருந்த போது அவருடைய மனைவி பாத்திமா நிலைகுலைந்து போனார் அவருக்கு ஆறுதலாக இருந்தவர்தான் மீரா விஜய் ஆண்டனியின் மருத்துவ ரிப்போட்டை முழுவதும் படித்துவிட்டு நான் எல்லாவற்றையும் படித்து விட்டேன்.
ஒரு பிரச்சனையும் இல்லை என்று போட்டு இருக்கு எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம் இன்னும் சில மாதங்களில் அப்பா முழுமையாக குணமாகி விடுவார் என தன்னுடைய அப்பா, அம்மாவுக்கு ஆறுதல் தந்தவர் இப்படி ஒரு முடிவெடுப்பது பேர் அதிர்ச்சி கூறினார் மேலும் பேசிய அவர் எனக்கு தெரிந்தவரை மீரா கொஞ்சம் பிடிவாத குணம் கொண்டவர் என கேள்விப்பட்டேன் அவர் என்ன ஆசைப்பட்டாலும் அதை அடைந்தே தீர வேண்டும் என நினைப்பார்.

அவர் நினைப்பதை உடனே அவருடைய பெற்றோர்கள் வாங்கி கொடுத்து விட வேண்டும் என நினைப்பவர் இப்படி செல்லமாக வளர்ப்பதால் கூட பிள்ளைகள் சில விஷயங்கள் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள் எனவே பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைக்கு சிறுவயதிலிருந்து NO என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளார்.