குணா – வாக பெயரை மாற்றியும் வசூலில் தேறாத கமலின் படம்.? காரணம் இதுதானா.. என்ன கொடுமடா.

0

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய படங்களை கொடுத்து வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இப்படி பல திரைப்படங்கள் கொடுத்து இருக்கிறார். அதில் ஒன்றாக தற்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக பார்க்கும்போது கமலின் குணா திரைப்படம் தான்.

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சொல்லிக்கொள்ளும்படி நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் கமலின் நடிப்பு வேற லெவெலில் இருந்தது. இந்த திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ரோஷினி என்பவர் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு இவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குணா படத்திற்கு முதன் முதலில் “மதிகெட்டான் சோலை” என பெயர் வைக்கப்பட்டது ஆனால் அந்த பெயர் படக்குழுவுக்கு நெகட்டிவாக தெரிந்ததால் அதை தூக்கி எறிந்துவிட்டு குணா என பெயரை மாற்றினார். இருப்பினும் படம் வெளிவந்து வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது.

அதற்கு காரணம் அப்போது இந்த படத்திற்கு எதிராக ரஜினியின் தளபதி திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது தான் காரணம் என கூறப்படுகிறது. குணா திரைப்படம் சோலோவாக வெளியாகியிருந்தால் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் என பலரும் கூறுகின்றனர்.

மேலும் இந்த படத்தில் வரும் குகை ஊட்டியில் உள்ளது இந்த படத்தின் பிறகு அந்த குகைக்கு குணா குகை என செல்லமாக பெயர் வைக்கப்பட்டது.