சூர்யா மிரட்டிவிட்ட “காக்க காக்க” திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு இதுவா.? வெளியான சுவாரசிய தகவல்

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் குடும்ப அடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து  சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் சங்ககால படமாக உருவாகி வருகிறது இதில் சூர்யா 6 விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என்றும், 5 மொழிகளில் வெளியாக உள்ளதாம்.. சூர்யா திரையுலகில் எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

அதில் முக்கியமான ஒன்று காக்க காக்க திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்து. சூர்யா ஓகே நல்ல பெயரை பெற்று கொடுக்க அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு பிறகு தான் அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தது. படத்தில் சூர்யாவுடன் இணைந்த ஜோதிகா, ஜீவன், ரம்யா கிருஷ்ணன், டேனியல் பாலாஜி என பல திரைப்படங்கள் நடித்திருந்தனர்.

இந்த படம் முழுக்க முழுக்க போலீஸ் மற்றும் வில்லன் குரூப்புக்கு இடையே நடக்கும் சண்டையை தான் படமாக எடுக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் இதில் காதல், செண்டிமெண்ட் சீன்கள் பிரமாதமாக இருக்கும் அதனால ரசிகர்கள் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்தியது. இந்த  திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் “பின்குறிப்பு” என்ற தலைப்பு தான்..

போஸ்டர் கூட அடிக்கப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலானது. பின் சில காரணங்களால் காக்க காக்க என தலைப்பை மாற்றி படத்தை ரிலீஸ் செய்து உள்ளதாம்.. இதே போலவே தான் இந்த படத்தில் முதலில் அஜித் அல்லது விக்ரமை நடிக்க வைக்க இயக்குனர் திட்டம் போட்டு இருந்தார். ஜோதிகா சூர்யாவை இந்த படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தாராம்.

Leave a Comment