மக்கள் அதிகம் “google” தேடிய படம் இதுதான்.? விஜயின் மாஸ்டர் படத்தை முந்தி NO. I இடம் பிடித்த தமிழ் நடிகர் படம் – வியப்பில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திரைப்படம் வெளி வருகின்றன ஆனால் சமீபகாலமாக கொரோனா தொற்று பிரச்சனை தீவிரமாக இருப்பதால் திரைப்படங்கள் அதிகம் வெளியாகாமல் இருக்கின்றன பாதி படங்கள் கிடப்பிலேயே கிடக்கிறது.

பாதி படங்கள் OTT தளங்கள் என போய்க் கொண்டிருந்த நிலையில் படிப்படியாக தற்போது குறைந்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளதால் படங்கள் தற்போது மீண்டும் அதிகம் வலம் வர தொடங்கியுள்ளது இதனால் திரையரங்கு பக்கம் மக்கள் கூட்டம் அலை மோதுகின்றன.

2021 – ல் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன ஆனால் மக்கள் மத்தியில் ஒரு சில படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அந்த வகையில் ஜெய்பீம், மாஸ்டர், கர்ணன், டாக்டர், மாநாடு போன்ற பல்வேறு திரைப்படங்கள் தமிழில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூல் வேட்டையும் நடத்தியுள்ளன.

இப்படி இருக்கின்ற நிலையில் 2021 ஆம் ஆண்டில் அதிகம் கூகுளில் தேடப்பட்ட படம் எது என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பார்க்கையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம். இந்த திரைப்படம் விருவிருப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் படம் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தை மக்கள் கண்டுகளிக்க மற்றும் அதைப் பற்றி அறிந்து கொள்ள  கூகுளை  அதிகம் பயன்படுத்தி உள்ளனர். முதலிடத்தில் ஜெய்பீம், இரண்டாவது இடத்தில் shershaah,ராதே, பெல்பாட்டம், eternals,மாஸ்டர் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.

Leave a Comment