விக்ரம் நடிப்பில் வெளியான படங்களில் அதிக நாட்கள் ஓடியது எந்த திரைப்படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றி கண்டு வலம் வருபவர் நடிகர் விக்ரம்.

நடிகர் விக்ரம் படத்திற்காக எப்பொழுதும்  கடினமாக உழைக்க கூடியவர் அந்த வகையில் இவர் நடித்த பல திரைப்படங்கள் வித்தியாசமானதாகவும் அதேசமயம் ரசிகர்களை கவரும் படியும் இருக்கும் இதனால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிக பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துவது வழக்கம்.

இருப்பினும் இவர் கடைசியாக நடித்த கடாரம் கொண்டான் திரைப்படம் சொல்லும்படி வெற்றியை பெறாததால் தற்போது வெற்றியை கொடுக்க கோப்ரா  என்ற திரைப் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எடுத்து இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவல் எகிறி உள்ளது.

கோப்ரா திரைப்படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் மற்றும் மகாவீர் கர்ணா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் வெளியாகி அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் எது என்பது குறித்து நாம் பார்க்க உள்ளோம்.

விக்ரம் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் தூள் இந்த படம் சென்னையில் மட்டும் 210 நாட்கள் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

thool
thool

 

Leave a Comment