அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த கன்னட ஹீரோக்கள் இவங்க தானா.?

சினிமா திரை உலகில் ஒரு படம் மிகப்பெரிய ஹிட் அடித்துவிட்டால் அப்படத்தினை ரீமேக் ரைட்ஸ் வாங்கி மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நம் திரை உலகில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது இப்பொழுது நமக்கு கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால் தல அஜித் நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டடித்த சில படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது அத்தகைய படங்களின் லிஸ்ட் இதோ.

1.அமர்க்களம்.

1999ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அமர்க்களம் இத்திரைப்படத்தை சரண் அவர்கள் இயக்கியிருந்த இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஷாலினி அவர்கள் தனது சிறந்த நடிகை நடித்து இருந்தார். இப்படத்தினை 2001 ஆம் ஆண்டு அசுரா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது இப்படத்தின் எஸ் மகேந்திரா இயக்கிய இதன் ரீமேக் வெர்ஷனில் ஷிவராஜ்குமார் மற்றும் தாமினி ஆகியோர் நடித்திருந்தனர்.

2.தீனா.

அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படம் அஜித் அவர்களுக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது இப்படத்தை ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கியிருந்த இப்படத்தில் அஜித்தின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தினை 2008ஆம் ஆண்டு கன்னடத்தில் தும் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது இப்படத்தில் ரீமேக் வெர்ஷனில் சுதீப், ரஷிதா ஜோடியாக நடித்திருந்தனர்.

varalaru
varalaru

3.வரலாறு.

தீனா அடுத்ததாக மீண்டும் தல அஜித் அவர்களுக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்த படம் வரலாறு இப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்த இப்படத்தில் அஜித் அவர்கள் மாறுபட்ட நடிப்பை நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் மூலம் அஜித் அவர்களுக்கு ஒரு நல்ல ஒரு இமேஜ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை கன்னடத்தில் 2010ஆம் ஆண்டு காட்பாதர் என்ற பெயரில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இருந்தது சேது ஸ்ரீ ராம் இயக்கிய இதன் ரீமேக் வெர்ஷனில் உபேந்திரா, சவுந்தர்யா ஜெயமாலா ஜோடியாக நடித்திருந்தனர்.

4.வீரம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த படம் வீரம் இப்படத்தில் அஜீத் தமன்னா ஜோடியாக நடித்திருந்தனர் இந்தப் படம் கன்னடத்தில் 2012 ஆண்டு ஓடேயா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது இப்படத்தினை ஸ்ரீதர் இயக்கியிருந்தார் ரீமேக் வெர்ஷனில் தர்ஷன் மற்றும் சனா ஜோடியாக நடித்து இருந்தனர்.

Leave a Comment