தொகுப்பாளினி பிரியங்காவா இது.? தன்னந்தனியாக ரோட்டில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ.

0
priyanka
priyanka

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் வி ஜே பிரியங்கா. இவர் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக  இருந்தார். பிரியங்கா ஆடியன்ஸ் பலரையும் கவர்ந்து இழுக்கும் குரல் வளம் உள்ளவர்.

அதனால் பின்பு விஜய் டிவியில் தொடர்ந்து ஆங்கராக பயணித்தார்.  அந்த வகையில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை சீசன் சீசன் ஆக தொகுத்து வழங்கி பிரபலம் அடைந்தார். இதை தொடர்ந்து ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியையும் சீசன் சீசன் ஆக தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது பிரியங்கா இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். இருந்தாலும் இடையில் பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5 யில் கலந்து கொண்டார் அதுலயும் தனது காமெடி சென்சை  பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியின் இறுதிவரை பயணித்து பிக் பாஸ் சீசன் 5 ரன்னர் அப் ஆனார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு சில நாட்கள் வீட்டிலேயே இருந்த பிரியங்கா மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்து ஆங்கரிங் தொழிலை தொடர்ந்து வருகிறார். தற்போது பிரியங்கா சூப்பர் சிங்கர், பிபி ஜோடிகள் போன்ற சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் பிரியங்கா சில ஈவண்டிற்காக வெளிநாடு அல்லது வெள்ளி மாநிலங்களுக்கு செல்வதும் வழக்கம்

அந்த வகையில் பிரியங்கா சொந்த வேலையின் காரணமாகவோ அல்லது ஈவண்டிற்காகவோ கர்நாடகா சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத ஒரு இடத்தில் செம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்றை அவரது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்று வருகின்றன. இதோ அந்த வீடியோ..