அண்மை காலமாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களை தேர்வு செய்துள்ளார். அந்த வகையில் AK 61 படத்தை ஹச். வினோத் இயக்குகிறார்.
AK 62 படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என அதிகாரபூர்வமாக கூறப்பட்டுள்ளது. முதலில் AK 61 படப்பிடிப்பு மிக தீவிரமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 32 நாட்கள் வெற்றிகரமாக நடந்து உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறினார்.
ஆனால் இந்த படத்தில் அஜித்தை தவிர எந்தெந்த நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள் என்பது இதுவரை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூr அண்மையில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் ஒன்றாக AK 61 படத்தில் அஜீத்துக்கு ஜோடி யார் என்பதையும் குறிப்பிட்டு உள்ளார்.
அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம். இந்த படத்தில் அஜீத்க்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் தான் நடிக்க உள்ளார் என பேச்சுவார்த்தை வந்த நிலையில் தற்போது போனிகபூர் திட்டவட்டமாக மஞ்சு வாரியர் தான் இந்த படத்தில் அஜித்திற்கு நாயகி என கூறினார்.

இதை வெகு விரைவிலேயே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது அதேபோல இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் இளம் நடிகர் வீரா நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது இது குறித்து வெகு விரைவிலேயே பதில்கள் வரலாம் எனவும் கூறப்படுகிறது.

