விஜய் நடித்த “துப்பாக்கி” திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு இதுவா.? நல்ல வேலை வைக்கல.. வச்சி இருந்தா.. மொத்தமும் குளோஸ்.

ஒரு நடிகர் உச்சத்தை அடைய இயக்குனர்கள் மிகப்பெரிய பங்காற்றார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. அதற்காக ஒரு இயக்குனருடன் தொடர்ந்து படம் பண்ணுவதை நடிகர்கள் விரும்புவது இல்லையே.. அதுபோல இயக்குனர்களும் ஒரே நடிகருடன் படம் பண்ணுவதை தவிர்கின்றனர்.

ஆனால் ஒரு சில கூட்டணி தொடர்ந்து இணைந்தால் சிறப்பாக இருக்கும் என கருதப்படுவது வழக்கம் அந்த வகையில் விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இணையும் ஒவ்வொரு திரைப்படமும் இதுவரை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த உள்ளன இதனால் ரசிகர்கள் கூட இவர்கள் இருவரும் இணையும் படம் வேற லெவல் இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் இவர்கள் இருவரும் 2012ஆம் ஆண்டு “துப்பாக்கி” அதன்பின் கத்தி, சர்க்கார் என தொடர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளனர் அதிலும் குறிப்பாக துப்பாக்கி திரைப்படம் சொல்லவே வேண்டாம் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம்.

இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து சத்யன், காஜல் அகர்வால், வித்யூத் ஜமால் மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து அசத்தி இருந்தனர். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது போதாத குறைக்கு இத்தரைப்படம் தமிழ் திரை உலகில் 100 கோடியை அள்ளிய புதிய சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்திற்கு கதைக்கு ஏற்றவாறு டைட்டில் துப்பாக்கி என பெயர் வைக்கப்பட்டுள்ளது ஆனால் முதன் முதலில் துப்பாக்கி படத்திற்கு வேறொரு டைட்டில் தான் படக்குழு தேர்வு செய்து ஆம் “மாலை நேரத்து மழை துளி” என பெயர் வைக்கப்பட்டு பின் அந்த பெயரை தூக்கிவிட்டு “துப்பாக்கி” என பெயர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment