டிடி என்கின்ற திவ்யதர்ஷினி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளர் பணியை செவ்வனே செய்து வருகின்றார். சின்னத்திரையில் பெரும் அளவு வரும் இவர் அதையும் தாண்டி வெள்ளித்திரையில் அவ்வபோது தலை காட்டுவது வழக்கம். சினிமாவில் பெரும்பாலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் வருகின்ற படங்களில் நடிப்பதால் இவர் வெள்ளித்திரையில் நிரந்தர இடம் கிடைக்காமல் போனது.
இருப்பினும் தனது பிடித்த தொழிலான தொகுப்பாளர் தொழிலையே அதிகம் விரும்பினார் அதற்கு ஏற்றார் போல விஜய் டிவியும் லட்சக்கணக்கில் இவருக்கு பணத்தை கொடுத்து தக்கவைத்துக் கொண்டது.
35 வயதுக்கு மேல் ஆகும் டிடி இப்போவும் ஆள் பார்ப்பதற்கு பருவமொட்டு போல் இருப்பதால் இவரை ரசிகர்கள் பின்தொடர்ந்து கொண்டே வருகின்றனர் மேலும் முக்கியமான நிகழ்ச்சிகளில் தனது அசாதாரணமான குரல் வளத்தின் மூலம் கட்டிக் கொடுத்து வருகிறார் ரசிகர்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றனர்.
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் வெற்றி கண்டு வந்த டிடி கடந்த 2014ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தனது திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வந்த நிலையில் இடையில் சில பிரச்சனைகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன்பிறகு தனியாக பொழுதை கழித்து வரும் டிடி சில விசேஷ நாள்களில் மற்றும் சோகமான பதிவை போட்டு ரசிகர்களை கண் கலங்க வைத்தார். அந்த வகையில் மகளிர் தினத்தின் போது ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதில் எனக்கு வயது 30 ஆகிறது சிங்கிள் டைவர்ஸ் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என அப்போது வெளியிட்டார். அவரது ரசிகர்களை சோர்வடைய செய்தது மேலும் சமீபத்தில்கூட டிடி ரசிகர்களுடன் விரைவில் உரையாடிய பொழுது உங்களின் முதல் திருமணம் தற்பொழுது தொல்லை கொடுக்கிறதா என்று கேட்டதற்கு இல்லை. முடிந்ததை திரும்பி பார்க்க மாட்டேன் என கூறினார். மேலும் காதல் பற்றி உங்கள் கருத்து என கேட்டதற்கு விளக்கமாக பதில் அளித்தார்
இரண்டாவது கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஐடியா உங்களது இருக்கா என கேட்டதற்கு தற்போது வரையிலும் அந்த எண்ணம் வரவே இல்லை என கூறினார். இப்படி இருக்கின்ற நிலையில் டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் மீசை தாடியுடன் என்பதால் ஆள் அடையாளமே தெரியாத போல் மாறி உள்ளார். இதை நீங்களே பாருங்கள்.
