நடிகர் கவுண்டமணிக்கு இதுதான் முதல் திரைப்படமா.! இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படம்.!

என்னதான் தற்பொழுது உள்ள காமெடி நடிகர்கள் வெள்ளித்திரையில் பல வித்தைகளைச் செய்து காட்டினாலும் அவர்கள் எல்லாம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்க முடியவில்லை அதற்கு முக்கிய காரணம் அவர்கள் செய்யும் சொதப்பல்கள் தான்.

ஆனால் அந்த காலத்தில் மிகவும் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கிய காமெடி நடிகர் என்றால் அது கவுண்டமணிதான் இவர் அந்த காலத்திலேயே நிறைய முன்னணி நடிகர்களுடன் நடித்து பல பாராட்டுகளை மக்களிடம் இருந்து பெற்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் மக்களுக்கு நன்றாகப் புரியும் படி ஒரு கருத்தை கூறியிருப்பார்

இவர் நிறைய திரைப்படங்களில் தனது காமெடி திறமையை காண்பிப்பதற்காக இவருடன் செந்தில் என்பவரையும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வைத்தார் கவுண்டமணி செந்தில் என்றாலே பல ரசிகர்களும் தற்பொழுது வரை இவர்கள் நடித்த காமெடி காட்சிகளை பார்த்து வயறு குலுங்க குலுங்க சிரிப்பார்கள்.

மேலும் கவுண்டமணியின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பற்றிய நிறைய தகவல்கள் மற்றும் புது புது விஷயங்கள் புதுப்புது புகைப்படங்கள் என அனைத்தும் சமூக வலைதளப் பக்கங்களில் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போதும் இவரைப் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது கவுண்டமணி சினிமாவில் 1964 ஆம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் வெளியான சர்வர் சுந்தரம் என்ற திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்த திரைப்படத்தில் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் புகழ்பெற்று விளங்கினார் அதனைத் தொடர்ந்துதான் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று இந்நிலையில் அந்த திரைப்படத்தில் இவர் நடித்த காட்சியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

goundamani2

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த கவுண்டமணியின் ரசிகர்கள் பலரும் கவுண்டமணியா இது என ஆச்சரியப் பட்டு இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version