OTT-யில் KGF படத்தை பார்க்க எவ்வளவு கட்டணம் தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்… இருந்தாலும் ஒர்த் தான் படம்

கன்னட திரைப்படங்களில் வெற்றித் திரைப்படமாக கொடுத்து வருபவர் நடிகர் யாஷ். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்கலும்  ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் மோகினி மனசு, ராக்கி, ஜானு போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனைதொடர்ந்து கே ஜி எஃப் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் திரையரங்குகளில்  1100 கோடி தாண்டி வசூல் செய்து கொண்டு வருகிறது.

மேலும் இந்த திரைப்படம்  அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருந்த நிலையில் OTTயில்  பார்க்க வேண்டுமென்றால் பணம் தனியாக செலுத்த வேண்டும் என்று சொன்னபோதே வாடிக்கையாளர்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள் இருந்தாலும் இல்லை என்றாலும் ரூபாய் 199 பணம் செலுத்தி தான் கே ஜி எஃப் 2 திரைப்படத்தை பார்க்கலாம் என்று அறிவித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

kgf 2
kgf 2

கே ஜி எஃப் 2 திரைப்படம் 199 ரூபாய் பணம் கட்டினால் மட்டும் பார்க்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment