ராஜா ராணி சீரியலில் சரவணனுக்கு அம்மாவாக நடித்த நடிகையா இது.! அதுவும் இப்படி ஒரு உடையில்.!

0

வெள்ளித்திரையில் ஒரு திரைப்படம் ஹிட்டாகி விட்டால் உடனே அந்த திரைப்படத்தை இரண்டாம் பாகமாக இயக்குவார்கள் அதை அப்படியே காப்பியடித்து சின்னத்திரை சீரியல்களிலும் செயல்படுத்தி வருகிறார்கள்.ஆம் சின்னத்திரையில் ஒரு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டால் அந்த சீரியலில் இரண்டாம் பாகத்தை உடனே இயக்கி விடுவார்கள்.

அந்த வகையில் ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதனைத் தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவிற்கு பதில் திருமணம் சீரியல் நடிகர் சிம்பு நடித்து வருகிறார் இதனாலேயே இந்த சீரியலின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலின் சித்துவின் அம்மாவாகவும் ஆல்யாவின் மாமியாருமான நடித்து வருபவர் பிரவீனா நாயர் இவர் தனது 18 வயதில் இருந்தே சினிமாவுலகில் நடித்து வருகிறார் ஐம்பதிற்கும் மேற்பட்ட மலையாள படங்களில் பிரவீனா நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகை பிரவீணா சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரியமானவளே என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார்.

மலையாளத்தில் இவர் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கியது என்றால் அது இவர் நடித்த ஹிட்டான 100 டேஸ் ஆப் லவ் படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்திருப்பார் இதன் மூலம் இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று,சாமி 2,கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து உள்ளார்.

பிரவீனா எப்படியோ அதே போல் இவர் தங்கை ஸ்ரீவித்யாவும் தமிழ் சினிமாவில் 60 காலகட்டங்களில் பல முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை  உருவாக்கி கொண்டார்.

Praveena
Praveena

இந்நிலையில் பிரவீனா பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது அந்த வகையில் பிரவீனா பருவ மொட்டாய் இருந்த வீடியோ காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

மேலும் இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரவீனா சும்மா அந்த காலத்திலேயே ஹீரோயினி போல் காட்சியளிக்கிறார் என கூறி வருகிறார்கள்.