அம்மா கணக்கு திரைப்படத்தில் அமலாபாலுக்கு மகளாக நடித்த நடிகையா இது..! ஆனா இப்போ இவரோட ரேஞ்சே வேற..!

0
amma-kanakku-1
amma-kanakku-1

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திறனை வெளிக்காட்டி தற்போது பிரபல நடிகையாக உருவமெடுத்து உள்ளவர்தான் யுவஸ்ரீ லக்ஷ்மி இவர் நடிகை அமலாபால் நடிப்பில் வெளியான அம்மா கணக்கு என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் அஸ்வினி ஐயர் இயக்கிய திரைப்படமாகும் மேலும் இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி ரேவதி அமலா பால் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து இருந்தார்கள் அதில் அமலாபாலுக்கு மகளாக நடித்து பிரபலமானவர் தான் யுவஸ்ரீ. இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து விட்டது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை காரைக்காலை சேர்ந்தவர் மேலும் இவர் தன்னுடைய நான்காம் வகுப்பு  படிக்கும் பொழுது பார்வை எனும் குறும்படத்தில் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர். அந்தவகையில் இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் சமுத்திரகனி இவரை அம்மா கணக்கு என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

yuvasree-1
yuvasree-1

இவ்வாறு பிரபலமான நமது குழந்தை நட்சத்திரத்தின் தந்தையார் காஞ்சனா மூன்றாம் பாகத்தில் கூட நடித்துள்ளார். இந்நிலையில் நமது நடிகை தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

நிலையில் இவருடைய புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருவது வழக்கமான நிலையில் தற்போது இவரை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அமலாபாலுக்கு மகளாக நடித்த நடிகையா இது என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

yuvasri-2
yuvasri-2