பிரபல சன் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமான சீரியல் தான் அன்பே வா. இந்த சீரியலில் ஹீரோவாக விராத் வருன் கேரக்டரில் மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார்.
அவருக்கு ஜோடியாக பூமிகா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் டெல்னா டேவிஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் மீது அதிக ஆர்வம் வந்ததால் மாடலிலும் கவனம் செலுத்தி வந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஏதாவது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று தேடி வந்தார். இந்த வகையில் 2014ஆம் ஆண்டு விடியும் வரை பேசு தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பட்றா திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே அவருக்கு கைகொடுக்கவில்லை.
பிறகு மலையாள திரையுலகில் ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த திரைப்படம் தான் திரையுலகில் ஒரு திருப்பு முனையாக இவருக்கு அமைந்தது. இதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான கவுண்டமணியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.49 ஓ திரைப் படத்தில் கவுண்டமணியுடன் நடித்திருப்பார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிறகு குரங்கு பொம்மை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதுமட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் எதார்த்த கதாநாயகியாக நடித்து வருகிறார்.