“ஈரம்” பட நடிகையா இது.? புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்.!

சினிமா உலகில் திறமையான நடிகைகள் இருந்தாலும் கொஞ்ச திரைப்படங்களில் நடித்துவிட்டு பின் காணாமல் போய்விடுகின்றனர். அந்த வரிசையில் இருப்பவர் தான் நடிகை சிந்து மேனன். இவர் சினிமா உலகில் தெலுங்கு கன்னடம் மலையாளம் தமிழ் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர்.

சினிமா உலகில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பருவ வயதை எட்டிய பின் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். நடிகை சிந்து மேனன் தமிழில் சமுத்திரம், கடல் பூக்கள், யூத், ஈரம் என ஒரு சில படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். குறிப்பாக ஈரம் படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்று தந்தது..

இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா உலகில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போனது. திறமை இருந்தும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இதை நன்கு உணர்ந்து கொண்ட சிந்து மேனனும் 2010 ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்ற லண்டனைச் சேர்ந்த இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஸ்வெல்தான என்ற ஒரு மகள் பிறந்திருக்கிறார். தற்பொழுது நடிகை சிந்துமேனன் லண்டனில் செட்டில் ஆகி வாழ்ந்து வருகிறார். குடும்பத்துடன் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் அவ்வபொழுது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

அந்த வகையில் லேட்டஸ்டாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் ஈரம் படத்தில் அப்பாவி மாறி நடித்த சிந்து மேனனா இது எனக்கூறி புகைப்படத்தை பார்த்து லைக்குகளை அள்ளி வீசி அசத்தி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

sindhu menon
sindhu menon

Leave a Comment