அஜித்தின் காதல் மன்னன் பட நடிகையா இது.? ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறாரே…

சினிமாவைப் பொறுத்தவரை புதுமுக நடிகைகள் பலர் அறிமுகமாகி கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவர்களுக்கு முன்னால் நடிகைகள் சினிமாவில் வயது வரம்பை தாண்டிய நடிகைகள் சினிமாவில் ஹீரோயினுக்கான அந்தஸ்தை இழந்து குணசேத்திர வேடங்களிலும் அம்மா, அண்ணி, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில நடிகைகள் வயது வரம்பை தாண்டிய பிறகு சினிமாவில் நடிக்காமல் குழந்தை குட்டி என செட்டில் ஆகி விடுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன பிரபல நடிகையைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மானு. இவர் அஜித்துடன் தனது 16 வது வயதில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவே அதன் பிறகு சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன் பிறகு 16 வருடங்கள் கழித்து என்ன சத்தம் இந்த நேரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இதனை தொடர்ந்து நடிகை மானு சமிபத்தில் ஒரு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் அப்போது காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்தது பற்றியும் படபிடிப்பில் நடந்த பல சுவாரசியமான பல தகவல்களை கூறி இருந்தார்.

இந்த நிலையில் நீண்ட நாட்கள் கழித்து நடிகை மானு தனது கணவர் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் காதல் மன்னன் பட நடிகையா இது என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

maanu
maanu
maanu
maanu

Leave a Comment