“காதல் கொண்டேன்” பட நடிகரா இது.? ஆளே மாறிட்டாரே.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

kadhal konden
kadhal konden

சினிமாவின் ஆரம்பத்தில் ஒன்னு ரெண்டு வெற்றி படங்களை கொடுத்த நடிகர் நடிகைகள் அதன் பிறகு காணாமல் போனதும் உண்டு அப்படி தான் செல்வராகவன் இயக்கத்தில் உருவான காதல் கொண்டேன் படத்தில் நடித்து பெயரையும், புகழையும் சம்பாதித்தவர் sudeep sarangi. காதல் கொண்டேன் படத்தில் காஜல் அகர்வாலுக்கு காதலன்னாக நடித்திருப்பார்.

இவர்களுடைய காதல் தனுஷுக்கு பிடிக்காததால் காஜல் அகர்வாலை காட்டுக்குள் இழுத்துச் சென்றுவார் ஆனால் சுதீப் தனது காதலியை தேடி காட்டுக்கு போவார். இந்த படத்தில் காஜல் அகர்வால், சுதீப், தனுஷ்.. இந்த மூவரின் காட்சி ஒவ்வொன்றும் அருமையாக இருக்கும் அதனாலயே இந்த படம் அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

இவர்களுடன் இணைந்து நாகேஷ், டேனியல் பாலாஜி, ஸ்ரீகாந்த் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்தப் படத்திற்கு  பிறகு  sudeep sarangi என்னவோ பிடிச்சிருக்கு, காதல் ஜெயம் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து  வாய்ப்புகள் கிடைக்காததால் பெங்காலி, ஹிந்தி படங்களில் நடித்தார்.

அங்கேயும் வாய்ப்புகள் குறைந்ததால் தற்பொழுது சின்னத்திரை மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் காக்கி டிரஸில் இருந்த புகைப்படம் ஒன்று பெரிய அளவில் பேசப்பட்டது. இதைப் பார்த்த ரசிகர்கள் காதல் கொண்டேன் படத்தில் நடித்த உங்களுக்காக இப்படி ஒரு நிலைமை எனக் கூறி கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர்.

kadhal konden
kadhal konden

இதற்கு சுதீப் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அந்த காக்கி டிரஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இது ஒரு விளம்பர படத்திற்காக நடிக்கிறேன் என கூறினார். இருந்தாலும் உங்களுடைய திறமைக்கு நீங்கள் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தற்பொழுது சிறப்பாக வந்திருக்க வேண்டும் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையாய் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ காதல் கொண்டேன் பட நடிகர் sudeep sarangi எப்படி இருக்கிறார் பாருங்கள்..

sudeep sarangi
sudeep sarangi