கேரள நடிகர் நவீன் பாலின் அடுத்த படத்தை எடுக்க போவது இந்த தமிழ் இயக்குனரா.! இவர் ஜெயிக்க வேண்டும்.

மலையாள சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அதிகம் வைத்திருப்பவர் டாப் நடிகர் நவீன் பாலி. இவரது படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்கின்றனர் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் ராம் அவர்களை தேர்வு செய்துள்ளார் நடிகர் நவீன் பாலி.

நவீன் பாலின் சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும்படி திரைப்படங்கள் வெற்றி பெறாததால் தற்போது அதிரடியான ஒரு திரைப்படத்தைக் கொடுத்த இயக்குனர்களை சரியாக தேர்வு செய்து வந்த நிலையில் தற்போது ராம் அவருக்கு சிறப்பாக இருப்பார் என நம்பி ஒரு படத்தை கொடுக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த இயக்குனர் ராம் மலையாளத்திலும் மமுட்டியை வைத்து பேரன்பு என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த திரைப்படம் தமிழிலும், மலையாளத்திலும் வெளியானது. தமிழில் சொல்லிக் கொள்ளும்படி வரவேற்பை பெறாவிட்டாலும் மலையாளத்தில் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

இத்தனை வைத்துதான் நவின்பாலி இவருக்கு பட வாய்ப்பை கொடுத்துள்ளதாக ஒரு சினிமா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நவீன் பாலி தமிழில் இதுவரை நேரம், ரிச்சி ஆகிய திரைப்படங்கள் நடித்திருந்தார் அந்த திரைப்படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் மூன்றாவதாக இவர் தமிழில் நடிக்கபோகும் திரைப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கான தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பதை அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நவீன் பாலி தற்போதுவேறு ஒரு படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் அதை முடித்துவிட்டு பிறகு இவர் ராமுடன் இணைவார் என்பது தெரிய வருகிறது.

Leave a Comment

Exit mobile version