இளம் நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் சூப்பரான படங்களை கொடுத்து இருந்தாலும் போகப் போக ஒரு கட்டத்தில் ஆல் காணாமல் போய்விடுகின்றனர் அந்த லிஸ்டில் தற்போது ஸ்ரீதிவ்யா சேர்ந்துள்ளார் முதலில் இவர் சிவகார்த்திகேயன் சூரி நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
திரை படத்தில் ஹீரோயினாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார். அதன்பின் இவர் நடித்த காக்கி சட்டை, ஜீவா, சங்கிலி புங்கிலி கதவ தொற, ஈட்டி, மருது போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகமானதால் இவருக்கு வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது .
மேலும் இவர் பெருமளவு கிளாமர் காட்டாமல் தமிழ் சினிமாவில் நடித்து வந்ததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் படம் வாய்ப்பை கைப்பற்ற இவரும் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை அள்ளி வீசுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதும் ஆக இருந்தாலும் கூட வாய்ப்புகள் மட்டும் கிடைக்காமல் போனது.
இப்படி இருக்கின்ற நிலையில் இளம் ஹீரோக்களுடன் நடிக்க மட்டும் வாய்ப்புகள் அவ்வப்போது எட்டிப் பார்ப்பது வழக்கம் அதன் மூலமாக தனது திறமையை காட்டி விடலாம் என எண்ணி தற்போது நடிக்க தொடங்கியுள்ளார் இவர் ஐந்து வருடத்திற்குப் பிறகு மலையாளத்தில் உருவான ஜனகணமன என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதன் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 5 வருடத்தில் ஆளே மாறிப் போய் விட்டார் நடிகை ஸ்ரீதிவ்யா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
