என்னது துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி இதுவா.? உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

தான் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே தோல்வி என்று தெரிந்தும் விடா  முயற்சியினால் சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த நடிகர் தான் விக்ரம் இவர் சேது திரைப்படத்தை தொடர்ந்து நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனது முகத்தை பதிய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் விக்ரம் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏக போக வரவேற்பை தந்தார்கள் அதனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் கரிகால சோழனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது என்றே கூறலாம். மேலும் இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் விக்ரமின் நடிப்பு மிகவும் அட்டகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் நடிப்பில் உருவாகி பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட திரைப்படம் தான் துருவ நட்சத்திரம் இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். மேலும் ஹாரிஸ் இசையில் ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படம் பல நிதி பிரச்சனையால் பல வருடமாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது ஆனால் தற்பொழுது அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம் அதன்படி பார்த்தால் துருவ நட்சத்திரம் படம் வருகின்ற மே 16ஆம் தேதி திரைக்கு கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது என ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

vikram
vikram

இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படம் வெளிவந்தால் மிகவும் நன்றாக மகிழ்ச்சி அடைவோம் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் விக்ரம் நடிப்பில் கிடப்பில் போடப்பட்ட இந்த திரைப்படம் வெளிவந்துவிட்டால் இந்தத் திரைப்படம் பலகோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment