கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படமும் நேரடியாக OTT தளத்திற்கு செல்ல உள்ளதா.? இணையத்தில் வெளியான புதிய தகவல்.

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் கீர்த்தி சுரேஷ் இவர் தமிழில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து மிகவும் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக வலம் வரத்தொடங்கினார் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்பொழுது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

மேலும் இவர் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் தமிழ்,மலையாளம்,தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமீபகாலமாகவே புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார் என்று தான் கூற வேண்டும்.

இவரது நடிப்பில் வெளியான பென்குயின் மற்றும் மிஸ் இந்தியா ஆகிய திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியானது அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள குட்லக் சசி திரைப்படமும் நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது என தகவல் வைரலானது கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெகபதி பாபு ஆகிய இருவரும் நடித்த இந்த திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகஉள்ளது என தகவல் வைரலாகி வந்தது.

keerthi suresh2
keerthi suresh2

ஆனால் இதனைப் பற்றி படக்குழு இந்த தகவல் அனைத்தும் வதந்தி எனவும் அனைவரும் பத்திரமாக இருங்கள் நாங்கள் அப்டேட் வெளியிடுவோம் எனவும் கூறியதாக இந்த தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் எதை நாங்கள் நம்ப வேண்டும் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என கூறிவருகிறார்கள்.

Leave a Comment