இப்படியும் கூட வினோத பழக்கம் இருக்குமா!! ராஷ்மிகா மந்தனாவை கலாய்க்கும் அவரது ரசிகர்கள்!!

rasmi-tamil360newz
rasmi-tamil360newz

actress rashmika mandhanna stange habit: ராஷ்மிகா மந்தனா க்ரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இதை தொடர்ந்து இவர் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்களது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் நேற்று சிறிது நேரம் அவர்களது ரசிகர்களுடன் ட்விட்டரிலும் உரையாடினார்.

ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தயக்கமில்லாமல் பதில் அளித்து வந்த அவர் துன்பமான நேரங்களில் சிரிப்பது எனது வினோத பழக்கம் என அவர் கூறியுள்ளார். இதனால் எந்த ஒரு சூழ்நிலையையும் என்னால் எளிதாக சமாளிக்க முடியும். இது ஒரு தீவிரமான பிரச்சனை என்பது எனக்கு தெரியும். ஆனால் இது தான் உண்மை என அவர் கூறியுள்ளார்.

மேலும் அவரது ரசிகர்கள் இடுக்கண் வருங்கால் நகுக என திருவள்ளுவர் கூறியதை அப்படியே ராஷ்மிகா பின்பற்றுகிறார் போல என கமெண்ட் செய்து வருகின்றனர். இதை தான் அவரது வினோத பழக்கமாக ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.