சினிமா உலகில் பல நடிகர்கள் எடுத்தவுடனேயே ஒரு சில சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து விட்டு தனது சம்பளத்தை உயர்த்தி வலம் வருவார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பார்த்தான் நடிகர் தனுஷ் சினிமா உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
இருந்தாலும் இவர் தனது சம்பளத்தை பெரிய அளவில் உயர்த்திக் கொள்ளாமல் தற்போது வரையிலும் இருப்பதால் பல இயக்குனர்களும் இவருக்கு கதை சொல்ல அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்றவாறு புதுமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கிறார். ஒரு வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பேசும் நபராகவே இருக்கிறார் தனுஷ்.
இவரது கையில் தற்போது பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன அந்த வகையில் திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தற்போது அவரது அண்ணன் இயக்கும் நானே வருவன் திரைப்படத்திலும் தற்போது நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் எஸ் கலைப்புலி தாணு அவர்கள் தயாரிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக வளர்ந்து வரும் நடிகையான இந்துஜா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றன.
படத்தின் சூட்டிங் வெகுவிரைவிலேயே தொடங்கி இருக்கிறது அதற்கு முன்பு நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த படத்தில் அவர் ஒரு வங்கி ஊழியர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின்றன