தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட்டது.
மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பியர்லி மானி மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர்கள் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சைத்ரா ரெட்டி தன்னுடைய உயிரை பணையம் வைத்து திருடர்களை பிடிப்பதற்கு அஜித்துடன் இணைந்து நடித்த காட்சி மிகவும் பிரம்மாண்டமாக அமைந்தது.
இதனால் நமது நடிகை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது மட்டுமில்லாமல் பாராட்டுகளையும் பெற்றார். நடிகை சைத்ரா ரெட்டி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் அந்த வகையில் இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு இவர் திரைப்படத்தில் திறமையான பெண்ணாக நடித்த நமது நடிகைக்கு நிஜ வாழ்க்கையில் ஒரு கோலி சோடாவை கூட திறக்க முடியாமல் அவரை பட்டதை பார்த்த பலரும் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த வகையில் கோலி சோடாவை இவர் திறக்க முயன்ற நிலையில் இறுதியில் அந்த கோலி சோடாவை உடைக்க முயற்சி செய்தார் இவ்வாறு அவர் செய்த செயல் பலரையும் சிரிக்க வைத்தது மட்டும் இல்லாமல் இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை 2019ஆம் ஆண்டு வெளியான ரக்கட் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நமது நடிகைக்கு அஜித்தின் வலிமை திரைப்படம் ஒரு வரப்பிரசாதம் போல் கிடைத்தது.