கமலுக்கு டூப் போட்ட நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா.! ஒருவேளை சாப்பாட்டிற்கு அல்லோலபடும் பிரபலம்…

தென்மதுரையில் இருந்து சினிமாவிற்கு வந்த பிரபல நடிகர் ஒருவர் தற்போது ஒருவேளை சாப்பாட்டிற்காக அல்லோலபடும் அவரது நிலைமை பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமான ஒரு நடிகர் ஒருவர் தற்போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தார்களால் ஒதுக்கப்பட்டு தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் சென்னையில் ஒருவேளை சாப்பாட்டுக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். இவருடைய நிலையை பார்த்து காவலைபட்டு வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல் இவர் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான கமல் விஜய் அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார் அந்த வகையில் விஜய் உடன் இணைந்து வசீகரா படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்திருப்பார் அதேபோல நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அட்டகாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த பிரபல நடிகர் கமலுக்கு டூப் போட்டு இருக்கிறார் அந்த நடிகர். அதாவது கடந்த 2001 ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் ஆளவந்தான். இந்த திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு அந்த நடிகர் தான் டூப் போட்டு இருக்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல் இதுபோல பல நடிகர்களுக்கு டூப் போட்டு நடித்து உள்ளாராம் அந்த நடிகர். இப்படி சினிமாவில் பிரபலமாக இருந்து வந்த அந்த நடிகர் தற்போது ஒருவேளை சாப்பாட்டிற்காக மிகவும் கஷ்டப்படும் தருவாயில் இருந்து வாருகிறார். இதனால் பலரும் சினிமாவில் உள்ள பிரபலங்களிடம் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கமெண்ட் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இன்னும் பல மனதை வருடக்கூடிய அளவிற்கு பல சுவாரசியமான தகவல்களை கூறி இருக்கிறார். இந்த வீடியோவை பிரபல யூட்யூப் சேனல் ஒன்று வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதே அந்த வீடியோ.

Leave a Comment

Exit mobile version