விஜய்க்கும் – கவுண்டமணிக்கும் இப்படி ஒரு பிணைப்பா.? இதோ அவரே கூறிய தகவல்

Vijay : இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்திருக்கும் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் அவரது அப்பா இயக்கிய படங்களில் நடித்தார் காரணம் ஆரம்பத்தில் விஜய் வைத்து படம் இயக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டாதால் அவரது அப்பா வளர்த்து விட்டார்.

ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய். பகவதி படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் அதன் பிறகு தொடர்ந்து ஆக்சன் கதைகளில் நடித்து மார்க்கெட்டை பிடித்ததோடு மட்டுமல்லாமல் இன்று வரை உச்சத்தில் இருக்கிறார் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியானால் 500 கோடிலிருது 1000 கோடி வரை வசூல் செய்யும் என சினிமா பிரபலங்களே பேசி வருகின்றனர் அந்த அளவிற்கு உயர்ந்திருக்கும் விஜய் நிஜத்தில் ரொம்பவும் அமைதியானவர் அதிகம் பேச மாட்டார் இருந்தாலும் ஒரு நடிகன் என்றால் அவருக்கு பல பிரச்சனைகள் வரும் அதை எல்லாம் கடந்து போக வேண்டும்.

பத்திரிக்கையாளர்கள் எழுதுவார்கள் படத்தை பற்றி நல்லது கெட்டது விமர்சனம் வரும், ரசிகர்கள் விமர்சிப்பார்கள் என ஒரு நடிகராக எல்லாத்தையும் சந்திக்கணும். இதனால் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு இருப்பார்கள் அப்படி விஜயும் சந்தித்துள்ளார். இந்த மாதிரியான சூழ்நிலையில் விஜய கவுண்டமணி தான் காப்பாற்று இருக்கிறாராம்.

goundamani and senthil
goundamani and senthil

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. பல வருடங்களுக்கு முன்பு விஜய் ஒரு பேட்டியில் கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் எப்பொழுதெல்லாம் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேனோ அப்பொழுது எல்லாம் கவுண்டமணியின் காமெடி காட்சிகளை தான் பார்ப்பேன். வீடியோ மட்டுமல்லாமல் அவரின் காமெடி காட்சிகளை ஆடியோவாகவும் மாற்றி வைத்திருக்கிறேன் அடிக்கடி கேட்பேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்