ஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவுள்ளதா.? லிஸ்ட்டுல வலிமை படத்தையும் தாண்டி.. இந்த நடிகர்களின் படங்கள் கூட இருக்கே.. உற்சாகத்தில் ரசிகர்கள்.

0

திரை உலகில் உச்சத்தை தொட்டு உள்ள நடிகர்களின் படங்கள் வெளிவருவதற்கு முன்பாக அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வேற லெவல் கொண்டாட ரசிகர்கள் காத்துக் கிடப்பது வழக்கம்.

அதுவும் படக்குழு சொன்ன தேதியில் வெளியிட்டால் அதை திருவிழா போல கொண்டாடவும் தயங்க மாட்டார்கள் அப்படி தான் தமிழ் சினிமா இதுவரையிலும் டாப் நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து கொண்டாடி உள்ளனர்.

இந்த ஜூலை மாதத்தில் மற்றும் மூன்று டாப் ஹீரோக்களின் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாக உள்ளன. அது என் அந்தப்படங்கள் யாரு ஹீரோக்கள் என்பதை லிஸ்ட் வாரியாக பார்ப்போம்.

ஜூலை மாதம் ஆரம்பத்திலேயே அஜித்தின் வலிமை பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது காரணம் பல வருடங்களாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கேட்டு வருவதால் ஜூலை முதலிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

இவரை தொடர்ந்து சூரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23ஆம் தேதி 40 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவர படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

அஜித் சூர்யாவைத் தொடர்ந்து தனுஷ் நடித்துவரும் 43 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்தநாள் என்பதால் அப்பொழுது வெளி வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. ஒரே மாதத்தில் மூன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர்.