அஜித் ஊர் ஊராய் சுற்றியதற்கு பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருக்கா.. வெளிவரும் உண்மை தகவல்.?

0
ajith
ajith

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். அஜித்துடன் இயக்குனர் ஹெச் வினோத் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை   மையமாக வைத்து உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, மகாநதி சங்கர், யோகி பாபு, தெலுங்கு பட நடிகர் அஜய் மற்றும் பாலிவுட் பிரபலம் சஞ்சய்தத் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் அஜித் படத்தில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே மும்பை ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது அடுத்ததாக படக்குழு புனே செல்ல இருக்கிறது. இதில் அஜித் கலந்து கொள்வார் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் தற்போது பெரிசாக பேசப்படுகிறது அஜித் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இடையில் எங்கேயுமே போக மாட்டார்.

ஆனால் ஏகே 61 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென வெளிநாடு பக்கம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ஏன் அவர் அவ்வாறு செய்தார் என்பது குறித்து விசாரித்து பார்க்கையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது அஜித்திற்கும் போனி கபூருக்கும் இடையே சம்பளப் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது அதனால் தான் அஜித் ஒரு மாதம் இடைவேளை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்று இருந்தார்.

அப்பொழுது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரலானது தற்பொழுது போனி கபூர் அஜித்தின் மேனேஜரை சந்தித்து சம்பளப் பிரச்சனையை பேசி முடிவெடுத்துள்ளனர். இதனை அடுத்து அஜித் தனது ஏகே 61 படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். படத்தின் சூட்டிங் இன்னும் 25 நாள் பாக்கி இருக்கிறதாம் அதை முடித்து விட்டால் படத்தின் அனைத்து காட்சிகளும் முடிந்து விடுமென சொல்லப்படுகிறது.