ஹிட்லருக்கும், அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கும் இப்படி ஒரு சமந்தம் இருக்கா.? பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

hitler-and-valimai
hitler-and-valimai

ஹச் . வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வலிமை”. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை முதலில் குறி வைத்தாலும் சில காரணங்களால் பின்வாங்கி அடுத்த வருடம் 2022ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அதிரடியாக கூறினார் இருப்பினும் ரசிகர்கள் நல்ல நாளில் வந்தால் போதும் அது எங்களுக்கு திருவிழா தான் என கூறி அந்த செய்தியையும் சமூக வலைதளப் பக்கத்தில் கொண்டாடினார்.

இந்த செய்தியை வெளியிட்ட ஒரு சில நேரத்திலேயே இந்த படத்தில் Glimpse வீடியோ யூடியூப்பில் வெளியானது குறைந்த நேரத்திலேயே அதிக பேர் கண்டுகளித்து அசத்தினார் மேலும் செம்ம மாஸாக அஜித், கார்த்திகேயா இருந்தாகவும் கூறிக் கொண்டாடினர் ரசிகர்கள். வீடியோவில் இடம்பெற்ற வசனமும் சூப்பராக இருந்தது என கூறப்பட்டது. யூடியூப்பில் அதிக பேர் லைக்குகளை அள்ளி வலிமை glimpse வீடியோவை நம்பர் இடத்துக்கு கொண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வீடியோவில் “நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள் சாத்தானின் அடிமைகள் நாங்கள் இருள் வாழைதான் எங்கள் உலகம் அதில் அத்துமீறி யாராவது கால் வைத்தால்” என்னும் வசனம் வரும். அந்த வசனத்திற்கு ஏற்ப சாத்தான் ஸ்லேவ் ரைடர்ஸ் பற்றிதான் என்று தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது ஜெர்மனி, ஸ்காட்லாந்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இயங்கி வரும் பைக் ரைடர்களை பின்புலமாகக் கொண்ட திரைப்படம் தான் வலிமை.

இந்த சாத்தான் பைக் ரைடர்கள் சும்மா ஊரை சுற்றி பார்க்கும் கூட்டம் அல்ல இவர்கள் ஹிட்லரின் அடிமைகளாக பார்க்கப்பட்ட பல கொள்ளைச் சம்பவங்களை செய்து காவல்துறையால் தேடப்பட்டு வரும் கேன் தான் சாத்தான் பைக் ரைடர்கள். ஆரம்பத்தில் ஒருகுழு உருவாகி காலப்போக்கில் அது பல குழுக்களாக உருவாகி பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

பல குழுக்கள் இருந்தாலும் ஒரு சில குழுக்கள் கொலை, கொள்ளை போன்றவற்றில் தவறான விஷயங்களில் ஈடுபட்டு வந்தன. இதிலும் ஒரு சில குழுக்கள் ஹிட்லரின் கருத்தைப் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது அவர்களை Nazi கள் அழைக்கப்படுகிறது இந்த சாத்தான் பைக் பைக் ரைடர் களின் தலைவரை பல வருடங்களாக போலீஸ் தேடிக் கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை மையமாக வைத்துதான் தல அஜித்தின் வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது என தெரிவிக்கின்றனர் இப்படிப் பார்க்கும்போது வலிமை திரைப்படம் த்திலர் மற்றும் ஆக்சன் கலந்த திரைப் படமாக இருக்கும் என தெரியவருகிறது.