பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதிய முல்லை கெட்டப்பில் பிரபல நடிகை.! அப்போ இனி இவங்கதான் புதிய முல்லயா.?

தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பியை ஏற்றுவதற்காக புதுப்புது நிகழ்ச்சிகள் மற்றும் புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி தங்களுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் சமீபகாலமாக ஒவ்வொரு தொலைக்காட்சியும் படத்தின் பெயர்களிலும் பாடல்களின் பெயர்களிலும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியல் பாண்டியன் ஸ்டோர்.

இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான குடும்பகதை மையமாக வைத்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, ராஜ்குமார், காவியா, குமரன், தங்கராஜன், சரவணன் என பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த சீரியல் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு எப்பொழுதும் தனி ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது என்னதான் இந்த சீரியலில் பல ஜோடிகள் நடித்திருந்தாலும் கதிர், முல்லை, கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜே சித்ரா இவர் மறைவுக்குப் பிறகு இந்த சீரியலில் முறையாக நடித்து வந்தவர் காவியா.

சித்ராவின் இழப்பு சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா, பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்து வந்தார். அந்த சீரியலில் கிடைத்த வெற்றியை விட தற்போது நடிக்கும் பாண்டியன் ஸ்டோர் முல்லை கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்து ள்ளது.

இந்த நிலையில் சீரியலில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மீனாவின் வீட்டிற்கு அனைவரும் சென்றுள்ளார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் மீண்டும் முல்லை கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  முல்லை கதாபாத்திரத்தில் காவியா விற்க்கு பதிலாக அபிநயா என்ற நடிகை நடிக்க இருப்பதாகவும் அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

pandiyan store
pandiyan store

இதுகுறித்து அபிநயா விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் கூறியதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் காவியாவிற்கு பதில் நான் நடிக்க போகிறேன் என பலரும் கூறி வதந்தியை கிளப்பி வருகிறார்கள். நான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை நான் சித்திராவின் தீவிர ரசிகை அதனால் அதேபோல் ஜிமிக்கி போடுவது உடை அணிவது எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் தான் நான் அது போல் உடை அணிகிறேன்.

pandiyan store
pandiyan store

அப்படி உடை அணிவதால் நான் முறையாக நடிக்கப்போகிறேன் என்று அர்த்தம் கிடையாது அதே போல் நான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் ஆனால் நான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது. அதேபோல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் முல்லை ஆகிவிட முடியாது அவர்கள் குடும்பத்தில் ஒரே மாதிரி ஜிமிக்கி ஹேர் ஸ்டைல் பயன்படுத்துவார்கள் அதேதான் நானும் பயன்படுத்தி உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment