அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் தேதியில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளதா.? இது என்ன புது சிக்கல்.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகுவது வழக்கம் தான் அவ்வாறு வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்து சாதனை படைத்து விடும்.

மேலும் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் தான் ரஜினி இவரது நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க இதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளான குஷ்பு,மீனா,கீர்த்தி சுரேஷ், நயன்தாரா போன்ற நடிகைகள் நடித்துள்ளார்கள் இதனாலேயே படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களை தூண்டுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சதீஷ், சூரி,ஜகபதி பாபு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது என தகவல் கிடைத்தது.

rajini4
rajini4

அதேபோல் தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் தான் தல அஜித் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் இன்னும் கிட்ட தட்ட முடிகிற நிலைமையில் இருக்கிறது மேலும் தல அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதியன்று திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருந்தது ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து விட்டார்கள்.

மேலும் தல அஜித்தின் வலிமை திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு படக்குழுவினர்கள் வெளியிட போவதாக திட்டமிட்டுள்ளார்களாம் அதேபோல் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

rajini4
rajini4

அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இரண்டு நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானால் ஒரே கொண்டாட்டம் தான் என கூறி வருகிறார்கள்.இதனாலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்று கூட கூறலாம்.

Leave a Comment