நடிகை சமந்தா போட்டிருக்கும் இந்த ஜாக்கெட்டின் மதிப்பு மட்டுமே இவ்வளவு லட்சமா.? வாய்பிளக்கும் ரசிகர்கள்.

samanatha
samanatha

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளில் நடித்து ஒருகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களான விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்கள் படங்களில் நடித்து அவர்களுக்கு ஈடு இணையாக தனது திறமையை காட்டியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்ததோடு அடுத்தடுத்த பட வாய்ப்பையும் பெற்றார்.

டாப் நடிகர்கள் படங்களில் கிளாமர் காட்டி நடித்ததால் ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது அதிலும் குறிப்பாக தெலுங்கில் தொடர்ந்து உச்ச நட்சத்திரங்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை தாறுமாறாக உயர்த்தினார். சினிமா உலகில் வெற்றியை மட்டுமே ருசித்து  வந்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்து உள்ளார்.

அந்த வகையில்  இவர் நடித்த ஒரு சில படங்கள், வெப் சீரிஸ் மற்றும் குடும்ப பிரச்சனை ஆகியவற்றிலும் சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இருப்பினும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது நேர்மையான எண்ணங்களின் மூலம் சினிமாவில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் அண்மையில்கூட முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அல்லு அர்ஜுன்.

நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு அசத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருப்பதால் செம சந்தோஷத்தில் இருக்கிறார் இந்த நிலையில் தனது தோழிகளுடன் நடிகை சமந்தா  சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பனி மலைகளுக்கு நடுவே தனது பொழுதை கொண்டாடி கழித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா போட்டிருக்கும் ஜாக்கெட் குறித்து ஒரு செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அவர் அணிந்திருக்கும் அந்த ஜாக்கெட்டின் விலை மட்டுமே சுமார்  121012 ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதோ சமந்தா அணிந்திருக்கும் அந்த ஜாக்கெட் உடன் இருக்கும் புகைப்படம்.

samanatha
samanatha