பொங்கல் வின்னர் துணிவா.? வாரிசா.? திருப்பூர் சுப்பிரமணியன் கொடுத்த பதில்..

இந்த பொங்கல் அஜித் விஜய் ரசிகர்களுக்கான பொங்கலாக அமைந்துள்ளது ஏனென்றால் அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு திரைப்படங்கள் போட்டி போட்டுள்ளன இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது துணிவு திரைப்படம் ஆக்சன் மற்றும் சமூக அக்கறை கலந்த ஒரு படமாக புதுவிதமாக இருக்கிறது.

மறுபக்கம் வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் கதையை எடுத்து வைத்திருக்கிறது. தொடர்ந்து நன்றாக ஓடுவதால் வசூலும் பட்டையை கிளப்புகிறது இரண்டு திரைப்படங்களுமே இதுவரை 150 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

இருப்பினும் ஒரு சில இடங்களில் துணிவு திரைப்படம் அதிகம் வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் திருப்பூர் சுப்பிரமணியம் பொங்கல் வின்னர் எந்த படம் என்பது குறித்து அவரே விளக்கமாக பதில் கொடுத்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

வாரிசு துணிவு இரண்டு திரைப்படங்களும் சமமான வசூலை அள்ளி இருக்கிறது முன்பு போல் தியேட்டரில் போய் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை கேட்கத் வேண்டியதில்லை அனைத்துமே ஆன்லைனில் வந்து விட்டது. தொடர்ந்து இரண்டு படங்களும் சமமான வசூலை அள்ளி உள்ளது

ஆனால் அவர்களுடைய தயாரிப்பாளர்களிடம் கேட்டால் வெவ்வேறு பதிலை சொல்லுவார்கள் தில்ராஜுவுடன் கேட்டால் விஜய்யின் வாரிசு தான் நம்பர் ஒன் என்பார் அதே போனி கபூரிடம் கேட்டால் அஜித் தான் நம்பர் ஒன் என சொல்வார். விளம்பரத்திற்காக தங்களது படங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள் தவிர வேறு ஒன்றும் கிடையாது என கூறினார் திருப்பூர் சுப்பிரமணியம் மேலும் பேசிய அவர்..

thirupur subramaniyan
thirupur subramaniyan

நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் 40 வருடங்களாக அந்த பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என கூறினார். அஜித் விஜய்க்கு வேண்டுமானால் வேறு பெயர்களை வைத்துக் கொள்ளுங்கள் அதில் எந்த தவறுமில்லை இரண்டு திரைப்படங்களும் சமமான வசூலை தான் அள்ளி இருக்கிறது அஜித் ரசிகர்கள் அதிக வசூலை துணிவு தான் அள்ளியது என்பார்கள் விஜய் ரசிகர்களிடம் கேட்டால் வாரிசு தான் அதிக வசூலை அள்ளியது என சொல்லுவார்கள் ஆனால் இரண்டுமே உண்மை இல்லை.. துணிவு வாரிசு இரண்டுமே சமமான வசூல் தான் என கூறியிருக்கிறார்

Leave a Comment