மாஸ்டர் திரைப்படம் பிகில் திரைப்படத்தை விட வெற்றியா அல்லது தோல்வியா.? வெளியானது மாஸ் அப்டேட்.

தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதுமட்டுமல்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை அடைந்து விடும்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வசூல் ரீதியாக பிகில் திரைப்படம் வெற்றி பெற்றதா இல்லை மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற்றதா என்பதை ஒரு திரை பிரபலத்திடம்  கேட்கும்பொழுது அவர் அளித்துள்ள பதில் என்னவென்று பார்ப்போம்.

2019ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு பிகில் திரைப்படம் இயக்குனர் அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் வெளிவந்தது.  இத்திரைப்படம் பெண்களை மையமாக வைத்து இயக்கப்பட்டதால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியானது. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்  இயக்கியிருந்தார். இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் பிகில் திரைப்படம் மற்றும் மாஸ்டர் திரைப்படம் இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது எந்த திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது என்பது சரியாக தெரியாமல் இருந்து வந்தது.

இதனை குறித்து நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான திரு சித்ரா லக்ஷ்மணனிடம் கேட்கும் பொழுது  பிகில் மற்றும் மாஸ்டர் திரைப்படத்தின் பட்ஜெட்டை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மாஸ்டர் திரைப்படம் தான் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Leave a Comment