தல அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த தேதியில் தான் வெளியாக உள்ளதா.? இணையத்தில் கசிந்த புதிய தகவல்.

0

தமிழ் சினிமா உலகில் தன்னம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தல அஜித் இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்வது ஒருபக்கம் இருந்தாலும் இவர் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து இருப்பார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் செய்த உதவிகளை பற்றி அதிகமாக தகவல் வெளிவராது ஏனென்றால் இவருக்கு பப்ளிசிட்டி என்ற விஷயம் சுத்தமாக பிடிக்காது என்பது ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்த விஷயமாகும்.

இவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க வேண்டும் என்பதற்காக நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என பல ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவரது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது எனக் கூறிய நிலையில் சில காரணங்கள் குறித்து வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தள்ளிக்கொண்டே போய் விட்டது இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என ஒரு தகவல் கசிந்துள்ளது அதில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூலை மாதம் 15ஆம் தேதி கண்டிப்பாக வெளியாக இருக்கிறது என தகவல் கசிந்துள்ளது.

ajith9
ajith9

ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் ரசிகர்கள் பலரும் இந்த நாளுக்காக காத்து இருக்கிறார்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை யார் எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் எங்களுக்கு தெரியவில்லை இதனைப் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என கேட்டு வருகிறார்கள்.