வலிமை படத்தின் கலெக்சன் இவ்வளவு தானா.? ஒருவழியாக உண்மையை சொன்ன போனிகபூர் – பெருமூச்சு விட்ட ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் சினிமா உலகில் ஒரு படத்தை கொடுக்க எவ்வளவு அவகாசம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளிவர மட்டுமே சுமார் இரண்டு ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொண்டது இருப்பினும் வெளிவந்து ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கு என்று தான் சொல்லவேண்டும்.

அந்த அளவிற்கு வலிமை படத்தில் அஜித்தின் நடிப்பு மற்றும் கதைகளும் ஆகியவை அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் அடித்து நொறுக்குகிறது இப்போது நான்காவது வாரத்தில் தொட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரையும் வலிமை திரைப்படம் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்க உரிமையாளர்களும் விநியோஸ்தர்களும் கொண்டாட வைத்துள்ளது வலிமை. ஏனென்றால் அந்த அளவிற்கு இந்தப் படத்தை மக்கள் கூட்டம் பார்த்து வந்தனர் நல்ல வசூலை அள்ளி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இப்படியிருக்க  வலிமை திரைப்படம்.

ஒரு வழியாக வருகின்ற 25ஆம் தேதி  ZEE 5 – OTT தளத்தில் வெளியாக இருக்கிறது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகிவிட்டன. ஒரு நாள் மட்டுமே இடைவேளை இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் இப்பொழுது கூட மக்கள் பெரிதளவில் பார்த்து திரையரங்கில் கண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய பதிவை போட்டுள்ளார் அதில் அவர் கூறியது பெரிய பிளாக்பஸ்டர் ஆக்சன் மூவி வலிமை. இதுவரை சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதை போனி கபூரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளதால் தற்போது ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment