தமிழ் சினிமா உலகில் தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் அஜித் இவர் தமிழ் சினிமா உலகில் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய திரைப்படங்களில் நடித்து தோல்வியை பெற்றாலும் அடுத்தடுத்து தனது ரசிகர்களுக்கு சிறப்பான திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வந்தார்.இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று விடுகிறது.
அந்த வகையில் பார்த்தால் தல அஜித் நடித்த அட்டகாசம்,ஆரம்பம்,வில்லன், வரலாறு,தீனா போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பல கோடி வரை வசூல் செய்துவிட்டது.அதிலும் குறிப்பாக பார்த்தால் கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் அளவில் நல்ல வரவேற்பை பெற்றதை நாம் பார்த்திருப்போம்.
இந்த திரைப்படத்தில் தான் அஜித்துக்கு தல என்று பெயர் வந்துவிட்டது அதுமட்டுமல்லாமல் தல அஜித்தை தல என்று முதலில் கூப்பிட்டவர் தான் மகாநதி சங்கர் அந்த திரைப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விட்டது.
இந்த திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் லைலாவை ஒரு கும்பல் கிண்டல் செய்யும் பொழுது தல அஜித் மாஸ் என்ட்ரி கொடுப்பார் அப்பொழுது தல அஜித்திடம் அடிவாங்கும் கும்பலில் இருந்த ஒருவர் மிகப் பெரிய இயக்குனராம்.ஆம் யார் அந்த இயக்குனர் என்று கேட்டால் வேறு யாரும் இல்லை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தான்.

அல்போன்ஸ் புத்திரன் ஆரம்பத்தில் தமிழில் ஒரு சில குறும் படங்களை மட்டுமே இயக்கி வந்தார் பின்பு மலையாளத்தில் இவர் இயக்கிய பிரேமம் திரைப்படம் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கி விட்டது.இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் கொடுக்கும் வகையில் தான் இருக்கிறது.