பாலா படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் படத்திலிருந்து விளக்குகிறாரா சூர்யா.? ஷாக் தகவல்

vaadivasal
vaadivasal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் வணங்கான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென சூர்யா பாதியிலேயே இந்த படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இவரை அடுத்து இந்த படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அதர்வா அல்லது அருண் விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து விரைவில் இயக்குனர் பாலா அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாகி வந்தது.

சமீப காலங்களாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென வாடிவாசல் திரைப்படத்திலிருந்து சூர்யா விலக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாடிவாசல் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து டெஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்றது அதன் பிறகு இது வரையிலும் எந்த ஒரு படபிடிப்போம் தொடங்கவில்லை.

எனவே இயக்குனர் வெற்றிமாறனும் தற்பொழுது விடுதலை படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார் அதேபோல் நடிகர் சூர்யா தன்னுடைய 42வது திரைப்படத்தில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா  உள்ளிட்ட சில இயக்குனர்களின் திரைப்படங்களின் நடிக்க திட்டமிட்டுள்ளதால் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

இவ்வாறு இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சியில் இருந்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது வாடிவாசல் படக் குழுவினர்கள் வாடிவாசல் திரைப்படத்திலிருந்து சூர்யா விலக்குவதாக வெளிவந்திருக்கும் தகவல் உண்மை இல்லை எனவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.