விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய வில்லன் கதாபாத்திரத்தில் சியான் விக்ரம் நடிக்கிறாரா.? அதுவும் இந்த படமா….

vikram: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் அரை டஜன் திரைப்படங்களில் நடித்து வருபவர். இந்த நிலையில் இவர் நடித்துவரும் திரைப்படங்கள் பாதி திரைப்படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகராக மாறியுள்ளார்,  அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அப்படி இருக்கும் வரையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வருகிறது.  இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென இந்த திரைப்படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியானது இதனை தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக விக்ரம் நடிக்க இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

ஆனால் இந்த தகவலை விக்ரம் தரப்பில் இருந்து முற்றிலுமாக மறுத்துள்ளார்,  புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடிக்க எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் முழுக்கமழுக்க இது தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

அப்படி இருக்கும் வகையில் புஷ்பா திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment