ஏகே 62-ல் சந்தானம் இந்த கேரக்டரில் தான் நடிக்கிறாரா.? ஆனால் காமெடியன் கிடையாது…

0
ak62
ak62

அஜித் மற்றும் ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்குமார் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இதற்கான அப்டேட் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் ஒரு சில தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் இணைந்து நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய நடிகர் சந்தானம் மறுபடியும் அஜித்திற்காக இந்த படத்தில் காமெடியனாக இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ஏகே 62 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தின் படபிடிப்பு இன்னும் சிறிது நாட்களில் தொடங்க உள்ளதாகவும் தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என்றும் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடிக்க தன்னுடைய சம்பளத்தை கொஞ்சம் உயர்த்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அது எதற்காக என்றால் சந்தனம் அவர்கள் ஏகே 62 திரைப்படத்தில் ஒரு முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால்தான் நடிகர் சந்தானம் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஏகே62 திரைப்படத்திலிருந்து இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகத நிலையில் இந்த தகவலை கண்ட ரசிகர்கள் கொஞ்சம் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் கொஞ்சம் பீதியில் தான் இருக்கிறார்கள் எதற்காக என்றால் இதுவரைக்கும் காதல் கமர்சியல் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து எப்படி ஒரு மாஸ் படத்தை உருவாக்குவார் என்ற பீதி இன்றும் இருந்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவனுக்கு அஜித்தை வைத்து கேங்ஸ்டர் திரைப்படம் கொடுத்தால் இதுவே அவருக்கு முதல் கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.