சினிமாவில் இருந்து விலகுகிறாரா சமந்தா.? வெளியான அதிர்ச்சி தகவல்

0
samantha
samantha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா இவர் தற்போது திடீரென சினிமாவில் இருந்து விலக உள்ளதாக சில தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது நடிகை சமந்தா அவர்கள் தற்போது சகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் திரையில் வெளியாக காத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன்னுக்காக நடிகை சமந்தா அவர்கள் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நடிகை சமந்தா அவர்கள் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி கலந்து கொண்டிருக்கிறது அப்போது பல கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்து வந்த நடிகை சமந்தா தன்னுடைய உடல் நலம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது சமந்தா அவர்கள் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டதால் அவரால் சரியாக எந்திரிக்க முடியவில்லை அவருக்கு அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது என்று கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் தற்போது குஷி படம் கையில் இருக்கிறது இந்த படம் முடித்தவுடன் அடுத்ததாக தன்னுடைய உடல் நலத்திற்காக ஓய்வு பெற இருப்பதாக கூறி இருக்கிறார்.

ஏற்கனவே மன நிம்மதிக்காக தன்னுடைய தோழிகளுடன் வெளிநாட்டில் ஜாலியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து தற்போது நடிகை சமந்தா அவர்கள் உடல் நலம் கருதி தனக்கு ஓய்வு வேண்டுமென்று சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய உடல் நலம் முழுமையாக குணமடைந்து விடும் என்று கூறியிருக்கிறார் அதன் பிறகு நான் மறுபடியும் சினிமாவில் நடிக்க வருவேன் என்று கூறி இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் இவர் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.