பிரின்ஸ் படம் மிஸ்டர் லோக்கல் இரண்டாவது பாகமா.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்

prince
prince

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் தற்போது டுவிட்டர் விமர்சனங்களில் ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் நன்றாக ஆரம்பித்து போய் கொண்டு இருக்கிறது. முதல் பாதி முழுவதும் காமெடி டைமிங் பக்கவா இருக்கு. அதிலும் குறிப்பாக வில்லனே காமெடி பண்ணும் இடங்கள் செம்ம கலகலப்பாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நீங்க கேம்பிரிட் ஜப்பானில் தேடுறீங்க என சொல்லும் காட்சிகள் எல்லாம் திரையரங்கு முழுவதும் விழுந்து விழுந்து சிரிக்கிறது என்று இந்த நெட்டிசன் தனது twitter விமர்சனத்தை பாசிட்டிவாக கொடுத்துள்ளார்.

prince
prince

ஹை பட்ஜெட் கலக்கப்போவது யாரு தான் இந்த பிரின்ஸ் திரைப்படம் ஜாதி மதம் என்ற ஸ்கிரிப்ட் ஒர்க் கிராஃப்ட் ஒர்க் இருக்கும் இதுவே இல்லாமல் ஸ்கூல் பசங்க பண்ணுகிற மாதிரி இருக்கு. அது மட்டுமல்லாமல் இந்த பிரின்ஸ் படம் பணம் நேரம் எல்லாமே தண்டச் செலவு இப்படி ஒரு கதைக்கு சிவகார்த்திகேயன் கரெக்ட் என நினைத்தாரா அனுதீப்  என்று கூறியுள்ளார்.

prince
prince

டாக்டர் படத்திற்கு பிறகு மீண்டும் வித்தியாசமான ஒரு கதையை தேர்ந்தெடுத்து சிறப்பாகவே நடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சாதாரண கதையை எடுத்து அதை காமெடி படமாக கொடுத்து உள்ளார் அனுதீப். இந்த படம் ஒரு ஜாலியான படம் பெரிய விஷயங்களை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றம்தான் அடைவீர்கள் என்று இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் அசத்த மறுபக்கம் மரியா ஜொலிக்க கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிம்பிலிக்கா பிளாப்பி அவர் ஆடியோ நடனம் எல்லாம் சூப்பர். மேலும் பெரிய திரைக்கதை எல்லாம் இல்லை என்றாலும் ஒருமுறை ஜாலியாக பார்க்கலாம் இந்த படத்திற்கு 3/5 ரேட்டிங் தருகிறேன் என்று இந்த ரசிகர்  ரேட்டிங் கொடுத்துள்ளார். மேலும் பிரின்ஸ் திரைப்படம் மிஸ்டர் லோகல் இரண்டாம் பாகம் என்று கூறி வருகின்றனர்.

prince
prince

இப்படி பல ரசிகர்கள் பிரின்ஸ் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர் இந்த விமர்சனம் எல்லாம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.