ஐஸ்வர்யா, தனுஷ் விவகாரத்துக்கு இரவு பார்ட்டி தான் காரணமா.? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.

dhanush and aishwarya
dhanush and aishwarya

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்துள்ளாராம் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருவதால் இவரது படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கின்றன. மேலும் தொடர்ந்தும் பல்வேறு படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அந்த வகையில் திருச்சிற்றம்பலம், மாறன் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சினிமா உலகில் வெற்றியை நோக்கி பயணித்தாலும் தற்போது குடும்ப பிரச்சினைகளும் சிக்கி உள்ளார். நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சிறப்பாக வாழ்ந்தனர் இவர்கள் இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர் இந்த நிலையில் நேற்று திடீரென தனுஷ் ரஜினியின் மகளும்  மனைவியுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவித்தார்.

18 வருடங்கள் கழித்து திடீரென இந்த முடிவை எடுக்க என்ன காரணம் என ரசிகர்கள் பலரும் மண்டையை போட்டு குழப்பி உள்ளனர். ரசிகர்களும் பலவிதத்தில் யோசித்து வருகின்றனர் ஒருவேளை இது கூட இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன நடிகர் தனுஷ் சில நடிகைகளுடன் ரொம்ப நெருக்கமாக இருந்தது தான் இதற்கான பிரச்சனை என கூறப்படுகிறது.

தனுஷை வைத்து அவரது மனைவி 3 என்ற திரைப்படத்தை இயக்கினார் அப்பொழுது சுருதிஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்டது ரஜினி குடும்பத்தில் பெரும் சர்ச்சையாக பின் சமரசமானது அதனைத் தொடர்ந்து நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கி வந்த தனுஷ் நடிகை அமலாபால், டிடி ஆகியவர்களுடன் விவாதத்துக்கு தனுஷ் தான் காரணம் என பேசப்பட்டது.

இது ஒரு பக்கமிருக்க படங்களில் நடிக்கும் பொழுது இரவு பார்ட்டி நடிகைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகின பெரிய விவகாரமாக பார்க்க தனுஷ் மனைவி ஒரு கட்டத்தில் முடிவு செய்துவிட்டாராம் இனி சென்னையை தவிர்த்து எங்கெல்லாம் நீங்கள் படங்களில் நடிக்கிறீர்களோ அங்கெல்லாம் வருவது மேலும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அங்கேயும் வருவதாக சில உத்தரவுகளை தனுசுக்கு போட்டுள்ளார்.

ஆனால் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இருப்பினும்  ஒன்னும் சொல்லாமல் இருந்தாலும் பல முறை எச்சரித்து உள்ளார். இப்படி போய் கொண்டிருந்த நிலையில் திடீரென ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நடிகர் தனுஷ்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ்,ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க ரஜினியும் எவ்வளவோ பேசி உள்ளார் ஆனால் அந்த பேச்சு நல்ல முடிவாக அமையவில்லையாம்.